புதுச்சேரி

3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருநள்ளாறு

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு மெயின்ரோட்டில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநள்ளாறு போலீஸ் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஆன்லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர், திருநள்ளாறு நளன்குளம் பனையடி தெருவை சேர்ந்த ராகவேந்திரா (வயது 38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.550 மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது