"அது வேற, இது வேற' என்ற படத்தைத் தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் அடுத்ததாக தயாரித்துள்ள திரைப்படம் ஒபாமா உங்களுக்காக. நாநி பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரித்வி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூர்னிஷா நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். படத்தொகுப்பு பணிகளை பி.லெனின் மேற்கொண்டுள்ளார்.
படம் குறித்து இயக்குனர் நாநி பாலா கூறியதாவது:- ஒபாமா என்றால் அமெரிக்க முன்னாள் அதிபர் என்று பலரும் நினைக்கலாம். ஒ என்பது கதாநாயகனின் இனிஷியல். பாமா என்பது கதாநாயகியின் பெயர். இதுதான், ஒபாமா. இன்றைய அரசியல் நிலவரத்தை நகைச்சுவையாக சொல்லும் படம், இது. நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவையில் ஜனகராஜ் கலக்கி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.