மாவட்ட செய்திகள்

கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் முருகன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் செயலாளர் குணசேகரன், மனோகரன், சங்கர், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வெகுமதி கூப்பன் வழங்க வேண்டும். கைத்தறி வளர்ச்சி கழக கடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.