புதுச்சேரி
புதுவையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியான நிலையில், இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் காய்ச்சல்
புதுவை மாநிலத்தில் தற்போது இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே பரிசோதனைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது தொடர் காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவையில் நேற்று முன் தினம் 3 பேர் இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூதாட்டி பலி
இந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சால் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்துபோனார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பின்னர் அவரது உடலுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது. 4 மாதத்துக்கு பின் கொரோனாவுக்கு தற்போது மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.
கொரோனாவுக்கு மூதாட்டி பலிகொரோனாவுக்கு மூதாட்டி பலி
இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுவிடம் கேட்ட போது, 'புதுவையில் இன்புளூயன்சா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்' என்றார்.