புதுச்சேரி

மூதாட்டி தற்கொலை

புதுச்சேரி கடற்கரை சாலை அருகே புடவையில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் போர் நினைவு தூண் எதிரில் குபேர்சாலை-செயிண்ட் ழில் வீதியில் தடுக்கட்டையில் (பேரிகார்டு) புடவையால் தூக்குப்போட்டு மூதாட்டி ஒருவர் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியகடை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், திருவண்ணாமலை செய்யாறு பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது85) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது