புதுச்சேரி

கொரோனாவுக்கு முதியவர் பலி

புதுவையில் கொரோனாவுக்கு புதிதாக 38 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் பலியானார்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவையில் கொரோனாவுக்கு புதிதாக 38 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் பலியானார்.

முதியவர் பலி

புதுவையில் தொற்று குறைந்து வரும் நிலையில் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்தநிலையில் இன்று முதியவர் ஒருவர் உயிரிழந்தார். கிருமாம்பாக்கம் இளங்கோ நகரை சேர்ந்த 74 வயது முதியவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 612 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 38 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 35 பேர் புதுச்சேரியையும், 3 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

தொடர் சிகிச்சை

நேற்று 110 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 17 பேர், வீடுகளில் 723 பேர் என 740 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில் தொற்று பரவல் 6.21 சதவீதமாகவும், குணமடைவது 98.42 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 236 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 966 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 ஆயிரத்து 676 பேரும் செலுத்திக்கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு