கோட்டுச்சேரி
காரைக்கால் தலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிவேலாயுதம் (வயது 73). இவர் தலைத்தெருவில் இருந்து கோட்டுச்சேரி நோக்கி பாரதியார் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பழனிவேலாயுதத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் தலை, காலில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.