லாஸ்பேட்டை
புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விமலா (வயது 69). இவருடைய மகள் சீதா வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். இதனால் விமலா மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவர் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை விமலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.