சினிமா துளிகள்

ஒன் 2 ஒன் மோதும் சுந்தர்.சி

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர்.சி, அடுத்ததாக ஒன் 2 ஒன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் ஒன் 2 ஒன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்