ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது

தினத்தந்தி

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கம்பீரமாக மாடவீதிகளில் தேர் உலா வந்தது. கோவிந்தா.. கோவிந்தா.. என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை