ஆன்மிகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

முதல் நாளாளில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தினத்தந்தி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர், இங்குள்ள ஆனந்தசரஸ் குளத்தில் நீருக்கடியில் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார்.

இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும். இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை