ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழா: 11-ம் தேதி ஒடுக்கு பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழாவின் இறுதிநாளில் நடைபெறும் 'வலிய படுக்கை' என்னும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தினத்தந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்கள் மட்டுமே இருமுடி கட்டி விரதம் இருந்து செல்லும் ஆலயங்களில் இக்கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் விழாவின்போது, பெண்கள் -அதுவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் விரதம் இருந்து, தலையில் இருமுடி கட்டி வந்து, பொங்கல் வைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள், கேரளாவில் உள்ள ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதுபோல, அங்குள்ள பெண்கள் பலரும் தமிழகத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்க, மாசி மாதம் நடைபெறும் திருவிழாவின்போது வருகை தருவார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை விழா நடைபெற உள்ளது.

கொடை விழாவின் இறுதிநாளில் நடைபெறும் 'வலிய படுக்கை' என்னும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கூடை கூடையாய் பூக்கள், பழங்கள், பலகாரம், வடை, அப்பம், திரளி ஆகியவற்றை, பக்தர்கள் தங்களின் வாயை மூடியபடி ஊர்வலமாக பாத்திரங்களில் எடுத்து வந்து அம்மன் சன்னிதி முன்பாக படைத்து வழிபடுவார்கள். மேலும் இந்த படைப்புக்குரிய சாதம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியில் சமைக்கப்படுவது என்பது கூடுதல் விசேஷம். வலிய படுக்கை என்ற ஒடுக்கு பூஜையின்போது கோவில் நிசப்தமாக இருக்கும். நள்ளிரவில் நடைபெறும் இந்த பூஜையுடன் மாசிக் கொடை விழா நிறைவு பெறும்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி