ஆன்மிகம்

கவுந்தப்பாடி: பட்டத்தரசி அம்மன் கோவில் வருஷாபிஷேகம்

பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே ரங்கன் காட்டூர் அம்மன் நகரில் கடந்த ஆண்டு பட்டத்தரசி அம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ பொம்மி வெள்ளையம்மாள் மதுரை வீரன் மற்றும் பொட்டு அம்மன் சுவாமிக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நித்திய பூஜை, பௌர்ணமி, அமாவாசை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முதலாமாண்டு விழா மற்றும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை கணபதி ஹோமம், கலச வேள்வி பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார் தெய்வங்களுக்கு நவ திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கலச தீர்த்தம் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக மகா தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்