பொங்கல் திருவிழாவில் பறவை காவடி எடுத்து வந்த பக்தர் 
ஆன்மிகம்

சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

நாளை காலை கோவில் முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற உள்ளது.

தினத்தந்தி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்று முதல் பால்குடம், அக்னி சட்டி, முளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கினர்.

நேற்று இரவு காளியம்மன் கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் முன்பு நீண்ட வரிசையில் பெண்கள் திருவிளக்கு வைத்து விளக்கேற்றி காளியம்மனை வழிபட்டனர். அதன்பின்னர் கும்மி பாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வைகை ஆற்றிற்கு சென்று பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது சிலர் கரும்புத் தொட்டில் கட்டியும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.

நாளை காலை கோவில் முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற உள்ளது. இரவு மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் முளைப்பாரி எடுத்து வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை