ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் நடை செவ்வாய்கிழமையன்று(நாளை) அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
இதனையடுத்து நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பக்தர்கள் தங்களின் வருகையை அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.