ஆன்மிகம்

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி நிகழ்வு 13-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் இரண்டாம் தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூக்குழி திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் திருக்கல்யாணம், சுவாமி, அம்பாள் வீதி உலா, திருவிளக்கு பூஜை, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை திரௌபதி அம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா (தீமிதி நிகழ்வு) 10-ம் திருநாளான ஜூன் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை