தமிழ் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக மவுசு உருவாகி உள்ளது. ஏற்கனவே பார்த்திபனின் ஒத்த செருப்பு, விஷ்ணு விஷாலின் ராட்சசன், சூர்யா நடித்த சூரரைப்போற்று, லோகேஷ் கனகராஜின் மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன.
இந்நிலையில், மேலும் ஒரு தமிழ் படம் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதன்படி பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு சுவரை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.