சினிமா துளிகள்

திகில்-நகைச்சுவை கலந்த பேய் படத்தில் நடிக்கிறார், பாண்டியராஜன்

கதையின் நாயகனாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் நடிக்கிறார்.

தினத்தந்தி

''பழைய இருட்டுப் பாளையம், ஒரு சின்ன கிராமம். அந்த கிராமத்தில் ஒரு பழைய வீடு. அங்கு பேய் வசிப்பதாக ஊர் மக்கள் நம்புவதால், அது பேய் வீடு என்றே அழைக்கப்படுகிறது. அந்த வீட்டில் உள்ள ஒரு பொருளை எடுக்க 2 நண்பர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் போகிறார்கள்.

அதன் பிறகு அவரும், அந்த ஊரும் அல்லோகலப்படுகிறது. இந்த கருவை மையமாகக் கொண்டு, ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில், திகில்-நகைச்சுவை கலந்து 'ரியா' படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறோம்'' என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் கார்த்திக் சிவன்.

இதில் கதையின் நாயகனாக டைரக்டரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன் நடிக்கிறார். டைரக்டர் கார்த்திக் சிவன், தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். யாமினி, மாதவி, டிம்பிள், வையாபுரி, குமரேசன், தங்கபாண்டியன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு