வேலூர்
வேலூர் புதிய பஸ் நிலையம் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அதிகப்படியாக பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பழைய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள், கார்கள், தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது ஆட்டோக்களும் பஸ் நிலையத்தின் உள்ளே போக்குவரத்து இடையூறாக செல்கிறது. சில ஆட்டோக்கள் பஸ் நிலைய உள்பகுதியிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பஸ்களை இயக்குவது சிரமமாக உள்ளதாக பஸ் டிரைவர்கள் தெரிவித்தனர். எனவே பழைய பஸ் நிலையத்துக்குள் வரும் ஆட்டோக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.