புதுச்சேரி

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்க கூடாது - கலெக்டர் குலோத்துங்கன்

புதுவை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்க கூடாது என்று கலெக்டர் டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்

தினத்தந்தி

கோட்டுச்சேரி

காரைக்கால்மேடு மற்றும் நிரவி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், சரியான நேரத்தில் பணிக்கு வந்துள்ளார்களா? என வருகைப் பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆய்வகத்தை பார்வையிட்ட கலெக்டர், சுகாதார நிலைய வளாகத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகளிடம் கூறினார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்காமல், விரைவில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து நிரவி பாரதிதாசன் அரசு நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார். மதிய சமையல் கூடத்தில் இருந்து சரியான நேரத்தில் மதிய உணவு வருகிறதா? உணவு தரமாக இருக்கிறதா? என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து