பெருமாநல்லூர்
பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பெருமாநல்லூர் பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் ராமசாமிக்கவுண்டர், மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய 3 பேர் வீரமரணம் அடைந்தார்கள். இவர்கள் நினைவாக பெருமாநல்லூரில் விவசாயிகள் நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் விவசாயிகள், வருடம்தோறும் இந்த ஸ்தூபியில் மரியாதை செய்வார்கள். 51-வது நினைவு தினமான நேற்று கொரோனா ஊரடங்கு காரணமாக, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. விவசாயிகளின் குடும்பத்தினர் மட்டும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.