மும்பை

சிவசேனா பெண் எம்.பி.க்கு போனில் மிரட்டல்

சிவசேனா பெண் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி போனில் மிரட்டல் வந்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

மும்பை, 

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏக்களை திரட்டி கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இதனால் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் சிவசேனா மாநிலங்களவை எம்.பியாக இருந்து வரும் பிரியங்கா சதுர்வேதிக்கு கடந்த 2 நாட்களாக செல்போனில் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்தது.

இந்த மிரட்டல் அழைப்புகள் தொடர்பாக புகார் அளிக்க மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டேவை நேரில் சந்தித்தார். மிரட்டல் அழைப்புகள் தொடர்பாக புகார் அளித்து இருப்பதாகவும், தனக்காக நேரம் ஒதுக்கிய போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு