Webstories

செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு!

காளான் தொக்கு செய்வது மிகவும் எளிது. வீட்டிலேயே கிடைக்கும் சாதாரண மசாலா பொருட்களுடன் மிகக் குறைந்த நேரத்தில் இந்த ரெசிபியை தயாரிக்கலாம். இதன் சுவைக்கு முக்கிய காரணம் வறுத்து அரைக்கும் மசாலாதான்.

தேவையான பொருட்கள்: காளான் -100 கிராம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, உப்பு - தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க: தனியா - 2 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 1, பூண்டு - 1 பல்

தாளிக்க: எண்ணெய் - 2 தேக்கரண்டி, பட்டை - 1 சிறியது, லவங்கம் - 2

செய்முறை: முதலில் காளானை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். பின்னர் வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் இல்லாமல் வாசனை வரும் வரை வறுத்து, ஆறிய பிறகு மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது காளானை சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக வேக விடவும்.

அதன் பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து 3–5 நிமிடங்கள் நன்றாக கிளறி வேகவிடவும். எண்ணெய் பிரியும் அளவுக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

சூடான சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் இந்த காளான் தொக்கு அருமையான சுவையை தரும். வீட்டில் ஒருமுறை செய்து பார்த்தால் மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவீர்கள்!

பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு செய்வது எப்படி?