கோப்புப்படம்  
சினிமா துளிகள்

நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது பின்னணி பாடகி சுசித்ரா புகார்

நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது பின்னணி பாடகி சுசித்ரா புகார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய போது பயில்வான் ரங்கநாதன், பிரபல பின்னணி பாடகி சுசித்திரா குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த பாடகி சுசித்திரா, பயில்வான் ரங்கநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி அவதூறாக வீடியோக்களில் பேசி வெளியிட்டுள்ளதாகவும் ஆதாரமின்றி பல்வேறு அவதூறுகள் தன் மீது சுமத்தி உள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதனை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி பாடகி சுசித்ரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு