மும்பை

7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் பலி

சார்கோப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் உயிரிழந்தார்

தினத்தந்தி

மும்பை, 

மால்வாணி பகுதியை சேர்ந்தவர் வாஷித் காசி (வயது30). இவர் தனியார் நிறுவனத்தில் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வாஷித் காசி சார்கோப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பிளம்பிங் வேலையில் ஈடுபட்டார். அவர் 7-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறை ஜன்னல் அருகே வெளிப்பகுதியில் உள்ள தண்ணீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக வாலிபர் தவறி விழுந்தார். கட்டிடத்தின் 3-வது மாடி சிலாப்பில் விழுந்த அவருக்கு தலை உள்பட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சதாப்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். சம்பவம் குறித்து போலீசார் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் வாலிபரை பணியில் ஈடுபடுத்திய ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பலியான வாலிபருக்கு பர்ஹீன் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?