புதுச்சேரி

பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கவுண்டன்பாளையத்தில் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

புதுச்சேரி

புதுச்சேரி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கவுண்டன்பாளையத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் வடிவேல், வன்னியர் சங்க துணை தலைவர் பாண்டுரங்கன், வன்னியர் சங்க பொருளாளர் நரசிம்மன், வன்னியர் சங்க செயலாளர் நாகப்பன், முருகன், சமூக முன்னேற்ற சங்க மாநில துணை தலைவர் சிவப்பிரகாசம் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், செப்டம்பர் 17-ந் தேதி வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் நினைவை போற்றும் வகையில் கிராமம் தோறும் வீர வணக்கம் செலுத்துவது, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி மற்றும் புத் கமிட்டி கூட்டங்கள் நடத்துவது, பள்ளி, வழிபாட்டு தலங்கள் அருகில் மதுபான கடைகளை அகற்ற அரசை வலியுறுத்துவது, தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கோரி விரைவில் போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்