புதுச்சேரி

தலைமறைவான அரசுப்பள்ளி ஆசிரியரை கைது செய்ய போலீஸ் தீவிரம்

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான அரசுப் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தினத்தந்தி

நெடுங்காடு

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான அரசுப் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

நெடுங்காட்டை அடுத்த மேல பொன்பேத்தி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர், நெடுங்காடு ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் அவரிடம் டியூசன் படித்த அதே பள்ளி 12-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் கணேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காரைக்கால் மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யவேண்டும் என பொதுமக்கள், சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நெடுங்காடு போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் கணேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு