புதுச்சேரி

பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போலீஸ் குவிப்பு

வவுச்சர் ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக பழனியப்பன் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றார். அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தலைமை பொறியாளர் பழனியப்பனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அதிகாரிகள், காண்டிராக்டர்கள் என நாள்தோறும் வருகை தருகின்றனர். இந்தநிலையில் இன்று பணிநீக்க ஊழியர்கள், வவுச்சர் ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் அங்கு வந்த பணிநீக்க ஊழியர்கள் மற்றும் வவுச்சர் ஊழியர்கள் தலைமை பொறியாளருக்கு வாழ்த்து தெரிவித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோக்கை விடுத்து விட்டு சென்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது