புதுச்சேரி

எல்லைப்பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனை

ஜனாதிபதி வருகை எதிரொலியாக எல்லைப்பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பாகூர்

ஜனாதிபதி வருகை எதிரொலியாக எல்லைப்பகுதியில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக வருகிற 7-ந்தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரெட்டி தலைமையிலான போலீசார் ,இன்று புதுச்சேரி - கடலூர் எல்லையான முள்ளோடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

ஆயுதங்கள் இருக்கிறதா?

அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சரியான ஆவணங்கள் இருக்கிறதா? என சோதனை செய்தனர். மேலும் காரில் ஏதேனும் ஆயுதங்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

இதேபோல்கோரிமேடு எல்லையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த நபர்களை வழிமறித்து விசாரித்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து