மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம்

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் போலீஸ் நிலையம் முன்பு இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் காரணமின்றி ஊர் சுற்றி வந்தவர்களுக்கும், முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர்.