மும்பை

கிரித் சோமையா ஆபாச வீடியோ குறித்து போலீசார் விசாரணை

பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குறித்த ஆபாச வீடியோ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனார்.

மும்பை, 

பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குறித்த ஆபாச வீடியோ ஒன்று மராத்தி செய்தி சேனலில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதெடர்பாக கிரித் சோமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் கிரித் சோமையா, "தான் எந்த பெண்ணையும் துன்புறுத்தவில்லை. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். நேற்று முன்தினம் சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "கிரித் சோமையா மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்" என்று உறுதி அளித்திருந்தார். இந்தநிலையில் போலீஸ் முத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மும்பை குற்றப்பிரிவு போலீசார் இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய சைபர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியை நாடியுள்ளோம்" என்றார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்