மும்பை

மத்திய படை போலீஸ்காரர், பெண் போலீஸ் தற்கொலை

புனேயில் மத்திய படை போலீஸ்காரர் மற்றும் பெண் போலீஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

தினத்தந்தி

புனே, 

புனே லோகேகாவ் பகுதியில் சர்வதேச விமான நிலையத்தில் கவுகாத்தியை சேர்ந்த 30 வயது பெண் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் போலீசாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 6-ந் தேதி தங்கிருந்த வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அப்பெண் திருமணமானவர் என தெரியவந்தது.

இதற்கிடையில் அப்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவரும் மிகுந்த மனஉளைச்சல் அடைந்தார். அவரும் தங்கிருந்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீசும், போலீஸ்காரரும் தற்கொலை செய்து கெண்ட சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்