இந்த நிலையில் மணிகண்டன் தனது ஆட்டோவில் எளாவூரில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி பயணம் செய்த பெண் ஒருவர் ஞாபக மறதியாக தான் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் அடங்கிய பையை ஆட்டோவில் விட்டு ஆரம்பாக்கம் பஜாரில் இறங்கி சென்றார்.
இந்தநிலையில், அந்த பையை கண்ட ஆட்டோ டிரைவர் ஆரம்பாக்கம் பஜாருக்கு விரைந்து சென்று கண்டறிந்து, அவருக்கு சொந்தமான பையை அவரிடம் ஒப்படைத்தார். அதற்கு அவர் நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ டிரைவருக்கு நன்றி தெரிவித்தார். இது பற்றி தகவல் அறிந்த காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஆகியோர் அந்த ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து வெகுமதி அளித்ததோடு, பாராட்டி நன்னடத்தை சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.