வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மகன் விஷ்வா (வயது 20). புதுவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர், தனது நண்பரை வில்லியனூர் பஸ் நிலையத்தில் ஏற்றி விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சுல்தான்பேட்டை பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஷ்வா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்கு வரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் வில்லியனூர் ஆத்துவாய்க்கால்பேட் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தனர்.