விரைவில் திரைக்கு வர இருக்கும் சவரக்கத்தி படத்தில் பூர்ணா, டைரக்டர் ராமின் மனைவியாக நடித்து இருக்கிறார். அவர் ஒரு குப்பை மேட்டில் அழுது புரள்வது போல் ஒரு காட்சி படத்தில் இடம் பெறுகிறது.
அந்த காட்சியில் நடித்தபோது நிஜமாகவே எனக்கு அழுகை வந்து விட்டது. எனக்கு பாராட்டு கிடைத்தால், அது டைரக்டர் மிஷ்கினையே சேரும் என்கிறார், பூர்ணா.