சினிமா துளிகள்

மலையாள நகைச்சுவை நடிகர் கொச்சு பிரேமன் மரணம்

மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தினத்தந்தி

பிரபல மலையாள நடிகர் கொச்சு பிரேமன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். திருவனந்தபுரத்தில் வசித்து வந்த அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கொச்சு பிரேமன் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 68. மரணம் அடைந்த கொச்சு பிரேமன் நாடகங்களில் நடித்து 1979-ல் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். அதிக படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார்.ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நட்சத்திர திலகம், மாட்டுப்பெட்டி மச்சான், இரட்டைக்குட்டிகளுடன் அச்சன், பட்டாபிஷேகம், குரு, தென்காசிப்பட்டணம், கல்யாணராமன், திலகம், திருவனந்தபுரம் லாட்ஜ், ஆர்டினரி, ஒழிமுறி, ஆக்ஷன் ஹீரோ பிஜு, கார்பன், தி ப்ரீஸ்ட் உள்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வந்தார். கொச்சு பிரேமன் மறைவுக்கு மலையாள நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு