சினிமா துளிகள்

வைரலாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் போஸ்டர்

தமிழில் தற்போது பிரபலமாகி வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

யூ டர்ன் என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் நேர்கொண்ட பார்வை, காற்று வெளியிடை, விக்ரம் வேதா, மாறா போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் ஷ்ரத்தா, கடைசியாக தமிழில் விஷாலின் 'சக்ரா' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடிகை ரோகினியுடன் இணைந்து நடித்துள்ளார். 'விட்னஸ்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தை 'தி பீப்பிள் மீடியா ஃபேக்டரி' தயாரித்துள்ளது. தீபக் இப்படத்தை இயக்கியதோடு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'விட்னஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "தூய்மை பணியாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படம் இதுவரை பார்த்திராத மெட்ரோ நகரங்களின் மறுபக்கத்தையும் அவர்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறையையும் இப்படம் பேசும்" என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது