வடகாடு, ஜூலை.13-
வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, கீழாத்தூர், ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, அரையப்பட்டி, பசுவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று வடகாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.