மாவட்ட செய்திகள்

மணப்பாறை, காட்டுப்புத்தூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

மணப்பாறை, காட்டுப்புத்தூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

மணப்பாறை, மார்ச்.30-
மணப்பாறை துணை மின்நிலையத்தில் இன்று (புதன்ழகிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொயைக்கப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர்கோவில், படுகளம் பூசாரிபட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பன்னாங்கொம்பு குடிநீர், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பண்ணபட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகபட்டி, வீராகோவில்பட்டி, பாலக்கருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகபட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), கலிங்கப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் காட்டுப்புத்தூர், கொளக்குடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காட்டுப்புத்தூர், உன்னியூர், முருங்கை, ஸ்ரீராம சமுத்திரம், சீலை பிள்ளையார்புதூர் மற்றும் அம்மன்குடி, கொளக்குடி, பாப்பாப்பட்டி, தும்பலம், வாளசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 7.30 முதல் காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை முசிறி மின் செயற் பொறியாளர் அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.