கரூர் 
மாவட்ட செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

நொய்யல்,

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரன் கோவில் உள்பட நொய்யல் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.