சினிமா துளிகள்

ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார் - வைரமுத்து ட்வீட்

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார் என்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தினத்தந்தி

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் லியனார்டோ டிகாப்ரியோ நடித்து ஆடம் மெக்கே இயக்கிய திரைப்படம் 'டோன்ட் லுக் அப்'. இப்படத்தில் ஜெனிபர் லாரன்ஸ், ராப் மொர்கன், ஜொனா ஹில் போன்ற பலர் நடித்துள்ளார். டிசம்பர் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இப்படம் குறித்து அவருடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விண்கோள் ஒன்று மோதப்போவதால் பூமி சிதறப்போகிறதென்று பதறிச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள் அமெரிக்க ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார் உலகம் நகையாடுகிறது கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது அழகான ஆங்கிலப் படம் Don't Look Up (மேலே பார்க்காதே) நீங்கள் மேலே பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியான 94- வது ஆஸ்கர் விருதுகள் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் டோன்ட் லுக் அப் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்