மும்பை

புனே ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்: 9 போலீசார் பணி இடைநீக்கம்

புனே ஆஸ்பத்திரியில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக 9 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

புனே, 

புனே ஆஸ்பத்திரியில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக 9 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தப்பி ஓட்டம்

போதைப்பொருள் வழக்கில் லலில் பாட்டீல் என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு பந்த் கார்டன் போலீசார் கைது செய்து இருந்தனர். பின்னர் அவரை எரவாடா சிறையில் அடைத்தனர். அங்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள சாசூன் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வரப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி மாலை எக்ஸ்ரே எடுக்க போலீசார் விசாரணை கைதி லலித் பாட்டீலை வார்டில் இருந்து அழைத்து சென்றனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்தனர்.

9 போலீசார் பணி இடைநீக்கம்

அவரை பிடிக்க 10 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிகிச்சையின் போது கைதி செல்போன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் இந்த விவகாரத்தில் போலீசார் பணியில் அலட்சியமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன்படி 5 போலீசார் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 4 பேலீசார் என 9 பேரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து