சினிமா துளிகள்

20 படங்களில் நடிக்க பிருதிவிராஜ் ஒப்பந்தம்

ஒரே ஆண்டில் 20 புதிய படங்களில் நடிக்க பிருதிவிராஜை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

தமிழில் மொழி படத்தில் நடித்து பிரபலமான பிருதிவிராஜ் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வந்த ஐயப்பனும் கோஷியும், புரோ டாடி, ஜன கன மன ஆகிய படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

இந்த நிலையில் ஒரே ஆண்டில் 20 புதிய படங்களில் நடிக்க பிருதிவிராஜை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திரைப்படங்கள் மற்றும் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் அடங்கும்.

இவ்வளவு படங்களுக்கு பிருதிவிராஜை ஒப்பந்தம் செய்து இருப்பது சக நடிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கடவா, கோல்டு, தீர்ப்பு, ஆடு ஜீவிதம், எம்புரான், காப்பா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கோல்டு படத்தில் பிருதிவிராஜ் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து