புதுச்சேரி

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வில்லியனூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

வில்லியனூர்

புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் நாளை  மறுநாள் (சனிக்கிழமை) வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்கிறார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் புதுச்சேரி, சென்னையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர். முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களின் சுய குறிப்பு 10 நகல்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து