புதுச்சேரி

தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை

பாகூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்துக்கொண்டார்.

தினத்தந்தி

பாகூர்

கடலூர் மாவட்டம் மணமேடு எம்.பி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 40). பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அட்டெண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களாக கன்னியகோவில் வீதியில் வாடகை வீட்டில் ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உடைய அவர், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி சரஸ்வதியிடம் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் மது குடிப்பதற்கு, மனைவியிடம் பணம் கேட்ட போது இ்ல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், மனைவி சரஸ்வதியை வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டு வேட்டியால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்