சினிமா துளிகள்

ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா மோகன், அடுத்ததாக ரஜினியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகிய அறிமுகமான இவர் தன் நடிப்பால் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து, பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பாராட்டை பெற்றார் பிரியங்கா மோகன்.

இவர் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது