சினிமா துளிகள்

சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் திரைக்கு வராமல் பல மாதங்களாக முடங்கி உள்ளது.

தினத்தந்தி

ஏற்கனவே கடந்த மார்ச் 26-ந்தேதி படம் வெளியாகும் என்று அறிவித்து தேர்தலால் தள்ளி வைத்தனர். பின்னர் ரம்ஜான் பண்டிகையில் வெளியிட முயன்று ஊரடங்கினால் தடைபட்டுள்ளது. இதையடுத்து டாக்டர் படத்தை ஓ.டி.டி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்க சம்மதித்துள்ளதாகவும் சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

ஆனால் டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் அதை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர் டாக்டர் படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில். ''முழுமையாக தயாரான டாக்டர் படத்துடன் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான பிரச்சினைகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன். படம் வெளியாக முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். நிச்சயமற்ற நிலையில் டாக்டர் படம் ரிலீஸ் குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது