சினிமா துளிகள்

‘டெடி’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டெடி’ படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தரராஜனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஓடிடியில் வெளியான படம் டெடி. சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் டெடி என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விரைவில் இப்படத்தின் 2-ம் பாகமும் உருவாக உள்ளது.

இந்நிலையில், டெடி படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தரராஜனுக்கு, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். டெடி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் இவ்வாறு செய்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சக்தி சவுந்தரராஜன், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது