பெங்களூரு

போலி சாதி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு-5பேர் மீது வழக்குப்பதிவு

போலி சாதி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு பெய்ய முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெங்களூரு:-

பெங்களூரு புறநகர் நெலமங்களா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தி ஆவார். இவரது மனைவி டாக்டர் சுஜா ஸ்ரீதர் ஆவார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் நெலமங்களாவில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியையாக இருந்து வந்தார். இதற்கிடையே சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, தனது மனைவிக்கு போலி சாதி சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் போலி சாதி சான்றிதழை பயன்படுத்தி சுஜாஸ்ரீதர், கல்லூரியின் உதவி பேராசிரியையாக பதவி உயர்வும் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த கல்லூரியை சேர்ந்த சகுந்தலா என்ற பேராசிரியைக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் இதுகுறித்து பொது உரிமைகள் இயக்குனர் ஆனந்த் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் புகார் அளித்தார். அதில், முன்னாள் எம்.எல்.ஏ. தனது மனைவிக்கு போலி சாதி சான்றிதழ் பெற்று அரசு சலுகை பெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து நெலமங்களா டவுன் போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தி, அவரது மனைவி, நெலமங்களா தாசில்தார், வருவாய் இன்ஸ்பெக்டர் மற்றும் கிராம கணக்காளர் ஆகிய 5 பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்