தாமரைக்குளம்,
தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்வழிக்கல்வி இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு புலவர் அரங்கநாடன் தலைமை தாங்கினார். சொல்லாய்வு அறிஞர் முனைவர் ம.சோ.விக்டர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பாரதியார் தமிழ்ச்சங்க நிர்வாகி துரைமுருகன், வள்ளலார் கல்வி நிலைய பேராசிரியர் புகழேந்தி, திருவள்ளுவர் ஞான மன்ற நிர்வாகி புலவர் பன்னீர்செல்வம், செந்தமிழ்வாணன் ஆகியோர் பேசினர்.
தாய்மொழி வழிக்கல்வி பயில்பவர்களை ஊக்குவிப் பதற்கு தேவையான நூல்கள் உருவாக்கப்பட வேண் டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வரை தமிழ்மொழியையே பயிற்றுமொழியாக கொண்டுவர வேண்டும், மாணவர்களின் மனப்பாட கல்விமுறையை மாற்றி சிந்தனை திறன்மிக்க புதிய தலைமுறையை உருவாக்க தாய்மொழி வழிக்கல்வியை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.